அப்போது அவர் கூறியதாவது: -சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 674 மாணவிகள் பயன் பெறுகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 23 ஆயிரத்து 927 மாணவிகள் நிதி உதவி பெற்று பயன் அடைந்துள்ளனர். உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 657 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.எம். செல்வகணபதி எம்.பி., மேயர் ராமச்சந்திரன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, கல்லூரி முதல்வர் காந்திமதி, அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.