உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வருகிற 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சேலத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, தயாளினி, கனிஷ்கா ஆகிய 3 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி, அவர்கள் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் ஆ. பார்த்திபனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் முனுசாமி, சேலம் மத்திய மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் கலைவாணி அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.