சேலத்தில் பொதுமக்களுடன் அமர்ந்து எம்எல்ஏ போராட்டம்

சேலம் சூரமங்கலத்தில் உள்ள ராமலிங்க வள்ளலார் பள்ளிக்கூடமானது சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதில் சுற்றுவட்டாரமான சூரமங்களம், சோளம்பள்ளம், புதுரோடு, அரியாகவுண்டம்பட்டி, காந்திநகர், சுந்தரநகர், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பள்ளியின் உரிமையாளர் முன்னறிவிப்பு ஏதும் இன்றி பள்ளி நிலத்தையும் கட்டிடத்தையும் விற்பனை செய்துள்ளார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் ஏதும் கொடுக்காமல் நிலம் வாங்கிய நபர் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வரக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. தற்போது பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்கள் தான் உள்ளன. 

பள்ளியை விட்டு வெளியேற்றினால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு பொதுத்தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் படிப்பு பாதிக்கும். எனவே இதனை கண்டித்து இன்று காலை ராமலிங்க வள்ளலார் பள்ளிக்கூடத்தின் முன்பு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுடன் அருள் எம்.எல்.ஏ போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி