சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அருள் எம்.எல்.ஏ. வீதி வீதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர் காளியம்மன் கோவில் பகுதி மற்றும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் நூலக கட்டுமான பணி பாதியில் நிற்பதாக மக்கள் தெரிவித்தனர். இதை அடுத்து அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும், போடிநாயக்கன்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் சக்தி மாரியம்மன் கோவில் அருகில் செட் அமைக்கும் பணி மற்றும் மயான எரிமேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.