22, 25-வது வார்டு மக்களிடம்அருள் எம். எல். ஏ. குறைகேட்பு

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு பகுதி மக்களிடம் அருள் எம்எல்ஏ நேற்று குறைகள் கேட்டறிந்தார். பூங்கா சேதமடைந்துள்ளதாகவும், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பூங்காவை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். தொடர்ந்து 22-வது வார்டு பகுதி மக்களிடம் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி