அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீடுகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகள் போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: - கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு 2024-25-ம் நிதி ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துப் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி