இதனை அவரது மாமா சையத்காதர் (34) என்பவர் தடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து சையத் அகமது தப்பி ஓடிவிட்டார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அசன், சையத்காதர் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கத்தியால் வெட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சையத் அகமது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு