சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர், நேற்று குகை லைன் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் வரிசையில் நின்றபோது, அவருக்குப் பின்னால் நின்ற செல்வா (30) என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில், இரவில் செல்வா நின்றிருந்தபோது சுரேஷ் அவரை வழிமறித்து, காலையில் ஏன் தகராறு செய்தாய் என்று கேட்டு கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.