சேலம் செவ்வாபேட்டை தேவாங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மலர்கள் வாங்கி கொடுத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.