சேலம்: இறந்தது போல் நடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 11-வது நாளாக நீடித்த இந்தப் போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் கழுத்தில் மாலை அணிந்து இறந்தவர்கள் போல் நடித்து படுத்திருந்தனர். அவர்களைச் சுற்றி மற்றவர்கள் தலையில் முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி