டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக மதுக்கடைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மதுபிரியர்கள் மது கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். சேலத்தில் தனியார் மதுபான கிளப்புகளில் மட்டும் மது விற்பனை நடைபெறுவதால், அங்கு மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.