அ. தி. மு. க. சார்பில் மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை எம். பி. யாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர், நிர்வாகிகளுடன் அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது மாநில வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் சரவணன், சேலம் புறநகர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சித்தன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரக்குமார் மற்றும் வக்கீல்கள் உடனிருந்தனர்.