ரயில்களில் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது குறித்த ஆலோசனை

சேலம் வழியாக ரயில்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், சேலம் ரயில்வே ஜங்ஷனில் ரயில்வே போலீசார் சார்பில் தீவிர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், சேலம் உட்கோட்ட ரயில்வே துணை எஸ்பி ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது சேலம் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி