சேலம்: காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் முதலமைச்சர வருகை ஒட்டி நேற்று முன்தினம் சேலம் வந்திருந்தார். இதன் பின்னர் அவர் நேற்று ஓமலூர் காவல் நிலையம் சென்று அங்கு ஆய்வு செய்தார். இதன் பின்னர் இன்று காலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் இன்று பிற்பகலில் சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் வயதான தம்பதிகள் உள்ள பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும், இரவில் கூடுதலாக ரோந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ், சேலம் சரக டிஐஜி உமா, மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை ஐஜி சசிகுமார், திருப்பூர் எஸ்பி யாதவ் கிரிஷ்அசோக், ஈரோடு எஸ்பி சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி