தமிழ் திறனறித்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித்தேர்வில் சேலம் மாவட்டம் 204 மாணவர்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது சேலம் மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகும். இதற்கு முன்னர் 2022-23 கல்வியாண்டில் 113 மாணவர்கள், 2023-24 கல்வியாண்டில் 142 மாணவர்கள், மற்றும் 2024-25 கல்வியாண்டில் 157 மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி