சேலம்: ஆதார் சேவை சிறப்பு முகாம் அஞ்சலகங்களில் ஏற்பாடு

சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அஞ்சல்துறை சார்பில் வரும், 7ந்தேதி முதல், 11ந்தேதி வரை, தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், 7ந் தேதி தபால் தினம், 8ந் தேதி அஞ்சல் தலை சேகரிப்பு தினம், 9ந் தேதி உலக அஞ்சல் தினம், 10ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினம், 11ந் தேதி நிதி வலுவூட்டல் தினமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை குறிக்கோளை மக்களிடம் கொண்டு சென்று தபால் சேவையை மேம்படுத்தி, அதை மக்கள் அதிகளவில் பயன்படுத்திக்கொள்வதே அஞ்சல்விழா நோக்கம். மேலும் அஞ்சல் வார விழாவையொட்டி அனைத்து அஞ்சலகங்களில் ஆதார் சேவை சிறப்பு முகாம் நடக்க உள்ளது. மக்கள் அனைவரும் அதிகளவில் சேமிப்பு, ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி