கோரிமேட்டை சேர்ந்த இளம்பெண் மாயம்

சேலம் கோரிமேடு அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் மோனிஷா (22), தனியார் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி துணிக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மோனிஷாவின் தாயார் சாந்தி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோனிஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி