சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வடக்கு மாநகர தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, கலெக்டர் அலுவலகம் முன்பு பலர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாக வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி