பரோலில் வீட்டிற்கு சென்ற அவர் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்றார். அவர் நேற்று காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரையை அளவுக்கு அதிகமாக தின்று விட்டதாக சிறைக்காவலர்களிடம் கூறியுள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது பரோலில் சென்ற போது அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது. அதற்குள் பரோல் முடிந்து சிறைக்கு செல்ல வேண்டிய இருந்ததால், அவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றால், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அப்போது மனைவியும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வருவார். 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதிக மாத்திரையை கோழி பிரகாஷ் தின்று உள்ளார் என்று கூறினர்.