கலெக்டர் ஆபிஸ் சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மதிய நேரத்தில் அனல்காற்று வீசி, சிக்னல்களில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசார் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பச்சை நிற பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல் வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோல் அனைத்து சிக்னல்களிலும் பந்தல் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி