சேலத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வை 9, 848 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தேர்வு மையங்களில் காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இதில் 9,848 பேர் பங்கேற்கின்றனர். மாநகரில் உள்ள 4 மையங்களில் 2,735 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி மற்றும் துணை கமிஷனர் கேழ்கர் சுப்பிரமணிய பாலசந்திரா தலைமையில் போலீசார் மேற்கொண்டுள்ளனர். தேர்வர்கள் முன்கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி