சேலத்தில் ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை திருட்டு

சேலம் அஸ்தம்பட்டி கங்காநகரைச் சேர்ந்த ஆசிரியை வசந்தி (36) நேற்று முன்தினம் தனது 8 பவுன் நகையை வீட்டில் இருந்த பிரிட்ஜ் மீது வைத்திருந்தார். நேற்று காலை நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டிற்குள் ஜன்னல் ஓரமாக இருந்த பிரிட்ஜ் வழியாக யாராவது கையை விட்டு நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி