கர்நாடகா, கேரளா அரசுகள் தமிழக ஆம்னி பஸ்களுக்கு ₹1.15 கோடி வரை அபராதம் விதித்ததை அடுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை வரி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று முதல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் இருந்து பெங்களூரு மற்றும் கேரளாவிற்கு இயக்கப்படும் 50 ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.