சேலத்தில் செல்போன் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலதர்ஷன் (21) என்பவர் சேலம் மாமாங்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் பணி முடிந்து சூரமங்கலம் அருகில் நடந்து சென்றபோது, 4 பேர் அவரை வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியைச் சேர்ந்த பூபரசன் (20), குரங்குச்சாவடியைச் சேர்ந்த கண்ணன் (21), பீர் மைதீன் (25) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி