சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 35 மாதம் ஜெயில்

சேலம் ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (38) என்பவர் கஞ்சா விற்ற வழக்கில் அஸ்தம்பட்டி போலீசாரால் 2011 ஏப்ரல் 6 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட சண்முகத்திற்கு 35 மாத சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி