சேலம் சரகத்தில் நேற்று (மே 25) 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இரும்பாலை இன்ஸ்பெக்டர் ருக்குமணி கோவை சரகத்திற்கும், அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் திருப்பூர் மாநகரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தர்மபுரி, கிருஷ்ணாபுரம், பாலக்கோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சேலம் மாநகரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் நேற்று நடைபெற்றன.