தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், கூட்டாளிகளுடன் சேர்ந்து வாலிபரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும், எருமாபாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கிரி, ஆசிக்அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இந்த மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ் துணை கமிஷனர் பரிந்துரைத்தார். இதைத் தொடர்ந்து, கமிஷனர் அனில் குமார் அவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி