சேலம் வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் (23), சாரதி (21), அசோக் (20). இவர்கள் அம்மாபேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். இவர்களைக் கைது செய்த கிச்சிப்பாளையம் போலீசார், அவர்கள் 3 பேரும் தொடர்ந்து பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்குப் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், பிரேம்குமார், சாரதி, அசோக் ஆகிய 3 பேரும் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி