3-ந்தேதி கல்விக்கடன் மேளா கலெக்டர் அறிவிப்பு

சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்வி கடன் மேளா வருகிற மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்படும் வகையில் கல்வி கடன் மேளா நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் சேலம் மாநகரத்திற்கு உட்பட்ட சக்தி கைலாஷ் கல்லூரியில் வருகின்ற மூன்றாம் தேதி கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த கல்வி கடன் மேளாவில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உரிய சான்றிதழ்களை வழங்கி கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி