சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பிரபு (36) மற்றும் இளவரசன் (28) ஆகியோர் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்திவாசன் (28) என்பவர் கஞ்சா விற்ற வழக்கில் அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.