சேலம் அருகே வீரபாண்டி ரயில் நிலையம் அருகில் மது விற்பனை செய்த ராகுல்ராஜ் (37) என்பவரை கொண்டலாம்பட்டி போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 98 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் சினிமா நகர் பகுதியில் மதுபானம் விற்ற சரத்குமார் (34) மற்றும் ராஜ்திலக் (34) ஆகியோரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.