தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில், வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பல்வேறு வழித்தடங்களில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் வருகிற 16-ந் தேதி வரை இயக்கப்படும். சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.