சேலம்: வார இறுதிநாள் 250 சிறப்பு பஸ்கள்

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் இருந்து ஆத்தூர், செந்தாரப்பட்டி, ராசிபுரம், சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி