தொடர்ந்து காரில் போலீசார் சோதனை செய்தபோது, 27 மூட்டைகளில் 250 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் பாரி மாவட்டத்தை சேர்ந்த பஜன்லால் (வயது 25) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து காரில் சேலம் வழியாக மதுரைக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பஜன்லாலை போலீசார் கைது செய்தனர். மேலும் கார், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடியவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, அவர்களுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாத தாக்குதல்: 5 வீரர்கள் பலி