சேலம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (32) மற்றும் லோகநாதன் (31) ஆகியோர் கடந்த மாதம் வாழப்பாடியைச் சேர்ந்த மணி என்பவரிடம் கத்திமுனையில் ரூ. 1,500 பறித்த வழக்கில் காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வீராணம், காரிப்பட்டி காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருந்தன. தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி உத்தரவிட்டார்.