தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு நடத்தினர். அதில் 2 பேர் பூட்டை உடைத்து சிகரெட் பண்டல்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சிகரெட் பண்டல்களை திருடிய கொள்ளையர்கள் காரில் பெங்களூரு சென்றிருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு தேடி வந்தனர். நேற்று பெங்களூரு டவுன் பகுதியில் சிகரெட் பண்டல்களுடன் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்பரிகர் (வயது 40), ரமேஷ்குமார் (30) என்பது தெரிந்தது. காரில் இருந்த சிகரெட்டுகள் சேலத்தில் குடோனில் இருந்து திருடி சென்றது தெரிந்தது. இதையடுத்து 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனர்.