சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4-வது பிளாட்பாரத்தில் ஒரு 'பை' கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது அதில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவைக் கடத்திவந்து, ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வீசிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.