சேலத்தில் 2 பெண் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் எஸ். பி அதிரடி

சங்ககிரி மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் எஸ்பி கெளதம் கோயல் ஆய்வு செய்தார். அப்போது புகார் மனுக்களை சரிவர பெற்று, ஆவணங்களை பராமரிக்கவில்லை என்ற காரணத்திற்காக இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினியை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதேபோல், நேற்று ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட எஸ்பி கெளதம் கோயல் ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது, இன்ஸ்பெக்டர் மலர்கொடி, போலீஸ் நிலையத்திற்கு வரும் புகார்களை சரிவர பெறாமல் இருந்ததும், அவர் முறையாக விசாரணை நடத்தாமல் ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மலர்கொடியை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கெளதம் கோயல் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி