சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகரில் உள்ள மர குடோனில் இருந்து ரூ. 34 ஆயிரம் மதிப்புள்ள 28 பிளைவுட்களை திருடியதாகக் கூறப்படும் கிருஷ்ணமூர்த்தி (40) மற்றும் மூர்த்தி (45) ஆகிய இருவரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான குடோனில் இருந்து இந்த திருட்டு நடந்துள்ளது.