சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

சேலம் டவுன் ரயில் நிலையப் பகுதியில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த விக்னேஷ் (23) மற்றும் சக்திவேல் (36) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி