சேலத்தில் நகை வியாபாரிடம் 75 கிராம் தங்கம் மோசடி

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நகை வியாபாரி சீனிவாசன், கடந்த ஆகஸ்ட் 2024-ல் சேலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் 136 கிராம் தங்கக் கட்டியைக் கொடுத்து தோடு செய்யக் கொடுத்துள்ளார். அவர்கள் 56 கிராம் மட்டுமே தோடு செய்து கொடுத்து, மீதி 75 கிராம் தங்கத்தை மோசடி செய்தது தெரியவந்தது. தங்கத்தைத் திரும்பக் கேட்டபோது, இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், வெங்கடேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி