சேலம்: மதுக்கடையில் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

சேலம் அங்கம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் (35) மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் (30) ஆகியோர் மெய்யனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ராஜமாணிக்கம் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜமாணிக்கம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஹரிதாஸ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி