சேலம், அம்மாபேட்டை பகுதியில் சுபாசித்தாஸ் என்ற இளைஞரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தில், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட இருவரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.