தமிழ்நாடு காவல்துறையில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றி வந்த 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கட்ராமன் பிறப்பித்துள்ளார். இந்த பதவி உயர்வுகள் மண்டலம் வாரியாக பிரித்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளன.