சேலத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில், 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தாரமங்கலத்திற்கும், அயோத்தியாப்பட்டணம் குணலட்சுமி தலைவாசலுக்கும், தாரமங்கலம் முருகன் ஏற்காட்டிற்கும் என பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்திரன் மற்றும் காடையாம்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி