சேலத்தில் 14 டாஸ்மாக் கடைகள் மூடல்

சேலம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் ஆத்தூர் ரயில்வே நிலையம் அருகே தலா ஒரு கடை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் 2 கடைகள், ஓமலூர் பஸ் நிலையம் அருகே 2 கடைகள், கொளத்தூர், பேளூர், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி