சேலம்: ரயிலில் கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் - ஆலப்புழா ரயில் நேற்று காலை 8: 30 மணிக்கு பொம்மிடி - சேலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே வந்து கொண்டிருந்தபோது போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பின்புறம் பொதுப்பிரிவு பெட்டியில் கழிப்பறை அருகே இரண்டு பெரிய பைகள் கேட்பார் அற்று கிடந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது 10 பண்டல்களில் கஞ்சா இருந்தது, அதன் எடை 13 கிலோ. அந்த பெட்டியில் பயணித்தவர்களிடம் விசாரித்தும் கடத்தி வந்தவர் யார் என்று தெரியவில்லை. பையுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி