சேலம் மாவட்டத்தில் 10,965 பேர் குரூப்-1 தேர்வில் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1, குரூப் 1-ஏ பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. சேலம் மாநகரில் சேலம் கோட்டை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. 

தேர்வு அறைகளை கண்காணிக்க 14 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள், தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளின்படி வினாத்தாள், விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 965 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 326 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் வர வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று காலை 8 மணி முதலே தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தொடர்புடைய செய்தி