சேலத்தில்10 போலீஸ் ஏட்டுக்கள் சிறப்பு எஸ். ஐக்களாக பதவி உயர்வு

சேலத்தில் 25 ஆண்டுகள் போலீஸ் ஏட்டாக பணியாற்றிய 10 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். அதன்படி கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதேபோன்று கருமந்துறை ஏட்டு நித்யானந்தம், மகுடஞ்சாவடி நடேசன், பனமரத்துப்பட்டி செந்தில்குமார், தாரமங்கலம் சிவப்பிரகாசம் உள்பட 10 ஏட்டுக்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான உத்தரவை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி