இதையடுத்து போலீசார், கடையின் உரிமையாளர் மூலம் இருசாகவுண்டரை தொடர்பு கொண்டு குட்கா கொண்டு வருமாறு கூறினர். அதன்பேரில் இருசாகவுண்டர், காரில் குட்கா கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்து சூரமங்கலத்தில் குடோனில் பதுக்கி வைத்து மாநகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்ததும், குட்கா வியாபாரி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று அங்கிருந்த 1 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.